திண்டிவனத்தில்ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு


திண்டிவனத்தில்ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடு போனது.

விழுப்புரம்


திண்டிவனம்,

வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு ஜெய்கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவுரி(வயது 47). சம்பவத்தன்று, கவுரி, சென்னை போரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். பின்னர் அங்கிருந்து திண்டிவனத்துக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது, தான் வைத்திருந்த கை பையை பார்த்தார். அதில் இருந்த 7 பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் இருந்த நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து திண்டிவனம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story