ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் நகை திருட்டு


ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 29 Jun 2023 5:30 AM IST (Updated: 29 Jun 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் நகை திருட்டு போனது.

கோயம்புத்தூர்


சுல்தான்பேட்டை


சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவள்ளியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 63). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் ராமநாதபுரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். மறுநாள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2¾ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.



Next Story