வாலிபரிடம் நகை, செல்போன் பறிப்பு
வாலிபரிடம் நகை, செல்போன் பறிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 21). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த நிலையில் தனது செல்போனில் பயன்படுத்திய ஒரு செயலி மூலம் அடையாளம் தெரியாத நபர் அஜித்குமாரை தொடர்பு கொண்டு பேசினாராம். பின்னர் அந்த நபர் அஜித்குமாரை ஒரு இடத்திற்கு வரசொன்னதாகவும், அங்கு சென்ற அஜித்குமாரை அந்த நபர் மற்றும் மேலும் 2 பேர் சேர்ந்து மிரட்டி மோட்டார்சைக்கிள், 2 பவுன் தங்கச்செயின், அரை பவுன் மோதிரம், செல்போன், மணி பர்ஸ் ஆகிவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story