நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
x

நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது

திருநெல்வேலி

பேட்டை:

தேசிய மேம்பாட்டு நிறுவனம மூலம் நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி தேவை இல்லை. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் சுயமாக நகைக்கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். இந்த சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், முகவரி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.6,500 ஆகியவற்றுடன் வருகிற 5-ந்தேதி நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில் தெருவில் உள்ள ஐஸ்வர்யா கல்வி மையத்துக்கு வரலாம். இந்த தகவலை ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story