பெரணமல்லூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
பெரணமல்லூர் அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகில் வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயா (வயது 52). இவர், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் ெதரியாத மர்மநபர்கள் 2 ேபரில் ஒருவன் திடீெரன ஜெயா அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றான்.
அதிர்ச்சி அடைந்த அவர் சங்கிலியை கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டார். அதில் சங்கிலி அறுந்து 1½ பவுன் மர்மநபரின் கையிலும், அரை பவுன் சங்கிலி ஜெயாவின் கையிலும் சிக்கியது. சங்கிலியை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் ஜெயா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.