டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு


டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டுபோனது.

திருச்சி

துறையூர்:

துறையூரை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ஏரி கடைக்கால் அருகே வசித்து வருபவர் குணசேகரன்(வயது 45). லாரி டிரைவர். இவரது மனைவி ராசாத்தி(40). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மறைவான இடத்தில் சாவியை வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 1½ பவுன் நகையும் திருட்டு போயிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story