ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு
x

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

லால்குடி, மே.21-

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பணம் திருட்டு

லால்குடி அருகே உள்ள மணக்கால் கீழ தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அகிலாம்பாள் (வயது 72). இவர் மணக்கால் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி மண்ணச்சநல்லூர் சென்றார். அந்த பஸ் லால்குடி வந்ததும், அவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, கைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றுவிட்டனர்.

இதை தற்செயலாக பார்த்தபோது, நகை-பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சக பயணிகளிடம் கேட்டுபார்த்தும் நகை-பணம் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகை-பணத்தை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story