கோவிலுக்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு


கோவிலுக்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு
x
சேலம்

நாமக்கல் அருகே மணப்பள்ளி வடக்கு தெருவை சேர்ந்த வடிவேல் மனைவி சரஸ்வதி (வயது 50). இவர், ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு நேற்று சாமி கும்பிட வந்தார். பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சரஸ்வதியின் தங்க சங்கிலிைய பறித்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story