ஆசிரியை வீட்டில் நகை திருட்டு


ஆசிரியை வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆசிரியை வீட்டில் நகை திருட்டு போனது.

கோயம்புத்தூர்

போத்தனூர்

கோவை போத்தனூர் கார்மெல் நகரை சேர்ந்தவர் கணிகை மேரி (வயது 52). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 27-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சொந்தஊராக தூத்துக்குடிக்கு சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து. இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story