Normal
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
காவேரிப்பட்டணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம், வீட்டு வசதி வாரியம் ரோஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். கடந்த 28-ந் தேதி வேலை விஷயமாக சுரேஷ் வெளியில் சென்றுவிட்டார். இதனால் அவரது மனைவி ராஜேஸ்வரி, வீட்டை பூட்டி விட்டு ஜெயன்கொட்டாயில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் சுரேஷ் வீட்டுக்கு வந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, 7 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இது குறித்து சுரேஷ் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story