தொழிலாளி வீட்டில் நகை திருட்டு


தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
x

தொழிலாளி வீட்டில் நகை திருடு போனது.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் திருமலை (வயது 52). தொழிலாளி. சம்பவத்தன்று, திருமலை குடு்பத்தோடு வெளியூர் சென்று இருந்த நிலையில், அவரது வீட்டு கதவு பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இது தொடர்பாக, தன்னுடன் சித்தாளாக வேலை பார்த்து வரும் வேப்பூர் சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி அமராவதி (49) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக திருமலை அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story