பஸ்சில் மூதாட்டி நகை திருட்டு


பஸ்சில் மூதாட்டி நகை திருட்டு
x

தர்மபுரியில் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு போனது.

தர்மபுரி

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 65). இவர் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரிக்கு டவுன் பஸ்சில் வந்தார். அப்போது அவருடன் வந்த 2 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த நகை அறுந்து இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மூதாட்டி நகையை கழற்றி சுருக்கு பைக்குள் வைத்து கொண்டார். பின்னர் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்தபோது அவர் பையில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story