வீட்டில் நகை திருட்டு
நெல்லை அருகே வீட்டில் நகை திருடப்பட்டது.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி என்.எஸ்.சி. போஸ் நகரை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 42). இவர் தனது மனைவியுடன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது 2 குழந்தைகளும் தாத்தா ஆறுமுகம் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 25-ந் தேதி குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வேடியப்பன் தனது மனைவியுடன் சுத்தமல்லிக்கு வந்தார். 27-ந் தேதி திருப்பூருக்கு திரும்பும் போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேடியப்பன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story