ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை அபேஸ் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


ஓடும் பஸ்சில்    பெண்ணிடம் 4 பவுன் நகை அபேஸ்    மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை அபேஸ் செய்து சென்றனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி ஜெயா (வயது 58). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக மங்கலம்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது, பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ? ஜெயா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டார். விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு வந்திறங்கியபோது, கழுத்தில் கிடந்த நகையை காணாதது கண்டு பதறிய ஜெயா இதுபற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story