ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கண்டமங்கலம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் நடந்த நகை, பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்
கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே நவமால்காப்போ் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது வீடு சேதமடைந்ததால் புதுவை ரெட்டியார்பாளையம் ஆசிரியர் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்தநிலையில் நவமால்காப்பேர் பகுதியில் பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து 5 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து ஜெயமூர்த்தி தனது வீட்டுக்கு வந்து பார்வையிட்டார். வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story