ஜீவா நினைவு தினம்
இந்திய கம்யூனிஸ்டு ஜீவா நினைவு தினம்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் அமைப்பின் நிறுவனரும், மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி புகழஞ்சலி நிகழ்ச்சி வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே நடந்தது. நிகழ்ச்சியில் ஜீவாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, கிளைத் தலைவர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெருமன்ற கிளை துணைச் செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் ராசேந்திரன், நல்லாசிரியர் விருது பெற்ற வைரக்கண்ணு, தஞ்சை ராமசுப்பிரமணியன், ராமசாமி, ராஜாஜி, ராம்குமார் உள்பட கலை இயக்கிய பெருமன்றத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story