டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 20 Feb 2023 8:29 AM GMT (Updated: 20 Feb 2023 10:50 AM GMT)

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் மீது மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு அவர்கள் வைத்திருந்த பெரியாரின் படத்தையும் சிதைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் டெல்லி ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவகள் மீதான தாக்குதலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. டெல்லி ஜே.என்.யூ பல்கலகழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது.

பல்கலைக்கழகங்கள் கற்றலுக்கான இடம் மட்டுமல்ல, விவாதம் மற்றும் பலதரப்பட்ட கருத்துகளுக்கான இடமும் கூட. பலகலைக்கழக நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு எனது ஒற்றுமையை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக மாணவர்களை பாதுகாக்கவும் கல்லூர் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story