வேலை வாய்ப்பு முகாம்
காரைக்குடியில் 14-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது
கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் மூன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி 2-வது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 14-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை காரைக்குடியிலுள்ள டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, காலிப்பணியிடங்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.