சோளிங்கரில் வேலை வாய்ப்பு முகாம்


சோளிங்கரில் வேலை வாய்ப்பு முகாம்
x

சோளிங்கரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் நாளை (சனிக்கிழமை) சோளிங்கர் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

முகாமில் 10,000-க்கும் மேற்ப்பட்டோர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட ஏதுவாக 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, நர்சிங், பி.இ., எம்.பி.ஏ. உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலைநாடுனர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story