ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

மக்கள் நலப்பணியாளர்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களை அரசு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் 8.11.2011 அன்று பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இந்த பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

18-ந் தேதிக்குள்

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து இன்று (திங்கட்கிழமை) முதல் 18-ந்தேதிக்குள் வழங்க வேண்டும்.

பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story