அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் குடும்பத்துக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் குடும்பத்துக்கு ஜான் பாண்டியன் ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் சின்னத்துரையின் வீட்டிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று நேரில் சென்றார். அங்கு குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், "இந்த காலத்தில் சாதி ரீதியான தூண்டுதல் இருப்பது ஒரு வேதனைக்குரிய விஷயம். இந்த மாதிரியான சாதி அடக்கு முறையான செயல்கள் பள்ளிகளிலே வந்திருப்பது வேதனைக்குரிய செயல். இச்செயல் தமிழகத்தில் எங்கும் நடக்கக் கூடாது. மேலும் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கும், பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கும் என்னிடம் கேட்டார்கள். இப்பகுதியில் நன்கு செயலாற்றுபவர் சபாநாயகர் அப்பாவு. அவர் இதனை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்" என்றார்.
Related Tags :
Next Story