ஜான் சல்லிவனின் 235-வது பிறந்தநாள் விழா
நீலகிரி மாவட்ட முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் 235-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஆர்.டி.ஓ. மரியாதை செலுத்தினார்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் 235-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஆர்.டி.ஓ. மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாள் விழா
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும், ஊட்டி நகரை நிர்மாணித்தவருமான ஜான் சல்லிவனின் 235-வது பிறந்தநாள் விழா, கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் உள்ள அவரது நினைவகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், ஜான் சல்லிவனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில் ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. ஆனால் ஊட்டி உருவாக காரணமான ஜான் சல்லிவனின் நினைவகம் மற்றும் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படவில்லை.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் போதுமான நிதியை ஒதுக்கி நினைவகம் மற்றும் பூங்காவை மேம்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத்தலைவர் உமாநாத், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் ஜான் சல்லிவன் அறக்கட்டளை நிர்வாகிகள், பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.