தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட். மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதை கைவிட வேண்டும். இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இ.எம்.ஐ.எஸ். என்ற செயலியில் ஆசிரியர்களின் பணிகளை பதிவேற்றம் செய்ய கூறுவதை நிறுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் பிற பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது. பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை வருடத்திற்கு 3 அல்லது 4 என்ற விகிதத்தில் நடத்த வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தேவராஜன், யோசுவா, அமர்நாத், பாலமுருகன், பழனிவேல், ரோஸ்பேபி உள்பட பலர் பங்கேற்றனர்.