பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க கூட்டு தணிக்கை


பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க கூட்டு தணிக்கை
x

பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க கூட்டு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க கூட்டு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

சாலை பாதுகாப்பு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-

பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 8 விபத்துகள் நடந்து உள்ளது. இதில் 16 வாகனங்கள் விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்து உள்ளனர். சாலையை கடக்க முயன்ற 2 பேர் வாகனம் மோதி இறந்து உள்ளனர். எனவே போக்குவரத்து மிகுந்த சாலைகளை கடப்பது குறித்து சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கூட்டு தணிக்கை

கோமங்கலம் பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இதை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். சீலக்காம்பட்டி, பூசாரிபட்டி பகுதிகளில் சாலை வளைவு அநகமாக உள்ளது. எனவே அந்த பகுதிகளில் விபத்துகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட கூட்டு தணிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்பராம்பாளையம் ஆத்துப்பாலத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க முடியாது என்பதால் ஒளிரும் ஸ்டிக்கர்களை பொருத்த வேண்டும். சின்னப்பாளையம் பிரிவு, அம்பராம்பாளையத்தில் இருந்த வளந்தாயமரம் வரை விபத்து அதிகம் நடைபெறும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதிகளில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பாலத்தில் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story