கடலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை 12-ம் ஆண்டு தொடக்க விழா அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கடலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
கடலூா் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். துணை மேலாளர் மேஜோ, கணக்கு மேலாளர் சுதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் அனூப் வரவேற்றார். விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், வக்கீல் சிவராஜ், ஏ.ஜி.ஆர். சுந்தர், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், சித்ராலயா ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கேக் வெட்டப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. கடையின் 12-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, ரூ.40 ஆயிரத்துக்கு தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. வைரங்களுக்கு 20 சதவீதமும், பிளாட்டினத்துக்கு 7 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி கொலுசு, மெட்டி மற்றும் அரைஞான் கொடிகளுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது என்று கிளை மேலாளர் அனூப் தெரிவித்தார்.