திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜே.பி. நட்டா சாமி தரிசனம்


x

ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. மாநிலத்தலைவர்கள், தரிசனம் செய்தனர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை வி.ஐ.பி. தரிசனம் மூலமாக, ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. மாநிலத்தலைவர்கள், தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டுமென ஜே.பி. நட்டா பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார்.


Next Story