நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பொறுப்பேற்பு


நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்த தமிழ்செல்வி, அரியலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த ராமராஜ் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நாமக்கல்லில் பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக இருந்தவர் ஆவார். மேலும் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ராமராஜ் சுமார் 30 ஆண்டுகள் வக்கீல் அனுபவம் உள்ளவர். நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டம், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுநிலை பட்டம் உள்பட 12 பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story