நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை நீதிபதி ஆய்வு


நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை  நீதிபதி ஆய்வு
x

காரியாபட்டியில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை நீதிபதி ஆய்வு செய்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி, ஆவியூர், மல்லாங்கிணறு, போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட குற்ற வழக்குகளுக்காக பொதுமக்கள் விருதுநகர் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் காரியாபட்டியில் நீதிமன்றம் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் காரியாபட்டியில் தற்போது நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விருதுநகர் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தகுமார், அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story