விக்கிரவாண்டி அருகே நீதிமன்ற வளாகம் கட்டதேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு


விக்கிரவாண்டி அருகே     நீதிமன்ற வளாகம் கட்டதேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே நீதிமன்ற வளாகம் கட்டதேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே வி.சாலை ஊராட்சிக்குட்பட்ட அடைக்கலாபுரம் கிராமத்தில் விக்கிரவாண்டி தாலுகா நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்காக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா அடைக்கலாபுரத்தில் நீதிமன்ற வளாகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர், நீதிமன்ற வளாகத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட்டதோடு, கட்டுமான பணிகளை தொடங்குவது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேலுவிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது விக்கிரவாண்டி உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சத்ய நாராயணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் இம்ரான்கான், அரசு வக்கீல் பொன்கோபு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகன், செயலாளர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story