கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நீதிபதி


கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நீதிபதி
x

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நீதிபதி

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி (தன்னாட்சி) சட்ட விழிப்புணர்வு குழுவினர் நேற்று நாகர்கோவில் கோர்ட்டின் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தையும் பார்வையிட்டனர். அப்போது மாணவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து நாகர்கோவில் கோர்ட்டு சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான நம்பிராஜன் விளக்கி பேசினார்.

அப்போது அவர், ஏழை மக்கள் தங்களது உரிமைகளை கோர்ட்டு மூலம் பெறவும், நீதியை பெறுவதற்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு போன்றவை எவ்வாறு உதவுகிறது? மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது? கோர்ட்டு பணிகளைத்தவிர மக்களின் வேறு பிரச்சினைகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு எவ்வாறு உதவுகிறது? என்பது குறித்து விளக்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட முன்னாள் அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர், வக்கீல் குரூஸ் செலின் ராணி, ஹோலிகிராஸ் கல்லூரி சட்ட விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியைகள் மேரி பெர்லி சுமதி, ஆனட் ஜாஸ்லின் ஜினி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story