காவலாளியை கொன்று செல்போன், பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


காவலாளியை கொன்று செல்போன், பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

குன்னத்தூரில் காவலாளியை கொன்று செல்போன், பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்

குன்னத்தூரில் காவலாளியை கொன்று செல்போன், பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

காவலாளியை கொன்று கொள்ளை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் செலம்பணன் (வயது 75). இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குறிச்சி பிரிவில் உள்ள டிராக்டர் ஒர்க்்ஷாப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 5-7-2017 அன்று இரவு செலம்பணன் ஒர்க்்ஷாப் முன் காவல் பணியில் இருந்தார். அதிகாலை 2 மணி அளவில், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த பிரசாந்த் (31) என்பவர், ஒர்க்்ஷாப்பில் புகுந்து திருட திட்டமிட்டார்.

ஒர்க்்ஷாப்புக்கு முன் கட்டிலில் அமர்ந்து காவல் பணியில் இருந்த முதியவர் செலம்பணனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த ரூ.1,500 மதிப்புள்ள செல்போன் மற்றும் ஒர்க்்ஷாப்பை உடைத்து உள்ளே இருந்த ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்தார். அதன்பிறகு செலம்பணனின் உடலை போர்வைக்குள் சுற்றி ஒர்க்்ஷாப் பின்புறம் உள்ள சமையலறையில் மறைத்து வைத்து விட்டு தப்பினார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பின்னர் பிரசாந்த்தை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை திருடி வந்த அவர், ஒர்க்்ஷாப்பில் திருடியபோது காவலாளியை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. காவலாளியை கொலை செய்து செல்போன், பணத்தை கொள்ளையடித்த குற்றத்துக்கு பிரசாந்த்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story