சிறுமி பாலியல் பலாத்காரம்; எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பாலியல் பலாத்காரம்; எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் பலாத்காரம்

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு இந்திராகாந்திநகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). எலக்ட்ரீசியன். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும், குழந்தையையும் பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கும், பவானியை சேர்ந்த கணவரை இழந்து வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண்ணின் 14 வயது மகள் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், திருமண ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை சதீஷ் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பவானி பஸ் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக சிறுமியுடன் நின்றிருந்த சதீஷை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை சதீஷ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

20 ஆண்டு ஜெயில்

இதைத்தொடர்ந்து சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சதீசுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


Next Story