3 பேர் கொலை வழக்கில் வருகிற 1-ந் தேதி தீர்ப்பு
3 பேர் கொலை வழக்கில் வருகிற 1-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமம் மற்றும் கோர்ட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் தீர்ப்பை வருகிற 1-ந் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Related Tags :
Next Story