நாமக்கல்லில் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்


நாமக்கல்லில் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:26 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

ஆண்டுதோறும் கோடை காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் உத்தரவின்பேரில், நாமக்கல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், போக்குவரத்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார். கோடை காலத்தில் நாள்தோறும் 4 முறை ஜூஸ் வழங்கப்படும் என்றும், நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலைய பிரிவில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு எலுமிச்சை ஜூஸ் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story