வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்வு


வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல்,

நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,130-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story