ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2023 7:00 PM GMT (Updated: 20 Aug 2023 7:00 PM GMT)

தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டோ டிரைவர்

தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களுக்கு இடையே வி.எம்.எஸ்.நகர் அருகில் தண்டவாளத்தில் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரெயில் தண்டவாளம் அருகே நின்ற ஆட்டோவையும் போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தினர்.

தற்கொலை

அப்போது இறந்தவர் தூத்துக்குடி அய்யப்பன்நகர் 2-வது தெருவை சேர்ந்த மகராஜா மகன் சிங்காரவேல் (வயது 30) என்பதும், இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. குழந்தைகள் இல்லை. நேற்று மனைவியிடம் சண்டை போட்டு விட்டு வெளியில் சென்று உள்ளார். இதில் மனம் உடைந்த சிங்காரவேல், சம்பவ இடத்தில் தண்டவாளத்தின் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு, அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story