சிறார் திரைப்படம் திரையிடல்
சிறார் திரைப்படம் திரையிடல்
தளி
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறார் திரைப்படம் ஹருண் - அருண் திரையிடப்பட்டது. நட்பும், தாய்மையும், குழந்தைகளின் மனமும் பாகுபாடு அறியாது, வேறுபாடு காணாதது எனும் உண்மையை உணர்த்தும் வகையில் 1 மணிநேரம் 13 நிமிடங்கள் ஓடும் இந்த படமானது ஆறு விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திரைப்படம் காட்சியிடல் மன்ற பொறுப்பாசிரியர்கள் ஆர்.ராசேந்திரன், எம்.நிர்மலா மேரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 400 மாணவியர்கள் திரைப்படத்தை கண்டு களித்தனர். திரைப்படம் குறித்த விமர்சனம், குறும்படம், தனி நபர் நடிப்பு ஆகிய போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் போட்டிக்கு ஒருவர் வீதம் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழாசிரியர் வே.சின்னராசு, இடைநிலை ஆசிரியர் எஸ்.லதா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.