சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில்ரூ.45 கோடியில் மேம்படுத்தும் பணி தொடக்கம்


சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில்ரூ.45 கோடியில் மேம்படுத்தும் பணி தொடக்கம்
x
சேலம்

சேலம்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.45 கோடியில் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஜங்ஷன் ரெயில் நிலையம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரெயில்வேயில் 18 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் ரூ.45 கோடியில் மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து சரியாக 11 மணிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இதற்காக ரெயில் நிலையத்தில் மேடை அமைக்கப்பட்டு பிரதமர் பேச்சை கேட்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை பிரதமர் தொடங்கி வைத்தவுடன் அங்கிருந்த அதிகாரிகளும், பா.ஜ.க.வினரும் கைகளை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நகரும் படிக்கட்டுகள்

இத்திட்டத்தின்படி ஜங்ஷன் ரெயில்நிலையம் முகப்பு மேம்படுத்தப்படும். மேலும், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, பயணச்சீட்டு அலுவலகம், நுழைவு பகுதி தரம் உயர்த்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்தம், கண்காணிப்பு கேமரா போன்றவை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், அ.திமு.க. எம்.பி. சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் அருள், பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க. மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட துணைத்தலைவர்கள் ரமேஷ், பிரபாகரன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story