ஜூனியர் ரெட்கிராஸ் விழிப்புணர்வு முகாம்
காட்பாடி அரசு பெண்கள் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பள்ளி அளவிலான விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.மாரிமுத்து, கே.திருமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.
முகாமில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத்து கலந்துகொண்டு பேசுகையில், 'ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு என்பது சுகாதாரம், சேவை, நட்பு என்ற முக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. மாணவிகள் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்றால் மேலும் உயரலாம். சேவை என்பது ரெட்கிராஸ் அமைப்பின் அடிப்படையாகும். பள்ளியின் இணை செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு தங்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு பள்ளிகளில் பல்வேறு இணை செயல்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது' என்றார்.
முடிவில் மாணவி மீனா நன்றி கூறினார்.