ஜூனியர் கைப்பந்து அணி தேர்வு
காரைக்குடியில் நாளை ஜூனியர் கைப்பந்து அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட ஜூனியர் கைப்பந்து அணிகளுக்கான தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு காரைக்குடி மானகிரி செட்டி நாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஜூனியர் கைப்பந்து (இருபாலருக்கும்) அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் சேலத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ள மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுகின்ற வீரர், வீராங்கனைகளுக்கு 7-ந் தேதி முதல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேற்படி தேர்வில் கலந்து கொள்பவர்கள் 1.1.2006-க்கு பிறகு பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். தேர்விற்கு வரும் போது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பிறந்த நாள் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக கொண்டு வரவேண்டும். இத்தகவலை சிவகங்கை மாவட்ட கைப்பந்து தலைவர் வரதராஜன், செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.