நீத்தார் நினைவு தினம்: உயிரிழந்த 188 ராணுவ வீரர்கள், போலீசாருக்கு அதிகாரிகள் மரியாதை


நீத்தார் நினைவு தினத்தை உயிரிழந்த 188 ராணுவ வீரர்கள், போலீசாருக்கு அதிகாரிகள் மரியாதை செய்தனர்.

மதுரை


இந்தியா முழுவதும் பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், போலீசார் தங்கள் பணியின் போது நாட்டுக்காக வீரமரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு இடத்தில் போலீஸ் கமிஷனர் லோகநாதன், தென் மண்டல ஐ.ஜி.நரேந்திரன்நாயர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டு உயிரிழந்த 188 ராணுவ வீரர்கள், போலீசாருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

1 More update

Next Story