சென்னையில் சணல் பொருட்கள் கண்காட்சி இன்று தொடக்கம்


மயிலாப்பூரில் தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள காமதேனு கல்யாண மண்டபத்தில் தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. 7 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியை நிலசீர்த்திருத்தங்கள் துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் டாக்டர் பீலா ராஜேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் விதவிதமான வடிவமைப்புகளுடன் கூடிய கைப்பைகள், அலங்கார தோள்பைகள், பணப்பைகள், காதணிகள் உள்ளிட்ட செயற்கை ஆபரணங்கள் போன்றவை கண்காட்சிக்கு வந்த பெண்களை வெகுவாக கவர்ந்தது.

சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டு பொம்மைகள்,கண்கவரும் வண்ணங்களில் வீட்டு அலங்கார பொருட்கள், தரை விரிப்புகள், அழகான காலணிகள், சணல் கயிற்றால் திரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் துர்கா சிலைகள் என ஏராளாமான கைவினை பொருட்கள் கண்காட்சியில் நிறைந்திருந்தன.

வருகிற 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்டுகளிக்கலாம்.


Next Story