கடவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. ஆலோசனை கூட்டம்
கடவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்டம், தரகம்பட்டியில், கடவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட கவுன்சிலர் நந்தினி தேவி, ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரபாகர், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்ட கடவூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளரும், கரூர் ஒன்றிய குழு தலைவருமான செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை கடவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது,
கடவூர் ஒன்றிய கழகத்தை நிர்வாக வசதிக்காக 3-ஆக பிரித்து புதிதாக அமைக்கப்பட்ட கடவூர் மேற்கு ஒன்றிய கழகத்திற்கு கடவூர் ஒன்றிய குழு தலைவராக உள்ள செல்வராஜை பொறுப்பாளராக அறிவித்து கழக பணியாற்ற வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, தரகம்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திரு உருவச்சிலை வைக்க அனுமதி பெறுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் வேதவல்லி, கட்சி நிர்வாகிகள் சிவாஜி, மருதை, நிஜாமுதீன், வீரராகவன், ராஜேந்திரன் உள்பட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.