முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு குரும்பூர் அங்கமங்கலத்தில் கபடி போட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்


முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு  குரும்பூர் அங்கமங்கலத்தில் கபடி போட்டி  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்
x

குரும்பூர் அங்கமங்கலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

குரும்பூர் அங்கமங்கலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.

கபடி போட்டி

குரும்பூர் அருகே அங்கமங்கலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டி கடந்த 28-ந் தேதி தொடங்கியது. போட்டியில் 48 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியை ஆனந்த மகேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

இதில் வீரமணி போட் கிளப் அணி முதலிடத்தை பிடித்து, ரூ. 50ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையை தட்டிச்சென்றது. 2-வது இடத்தை பிடித்த ஏ.பி.எம். குருகாட்டூரணி அணிக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை ஜாலி பிரண்ட்ஸ் குரு காட்டூரணி அணியும், நான்காவது பரிசை வரதராஜபுரம் அணியும் பெற்றன.

அமைச்சர் பரிசு வழங்கினார்

வெற்றி பெற்ற அணிகளுக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் மோகன் சி.லாசரஸ், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர், அமெச்சூர் கபடி கழக வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் பொது மேலாளர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வியாபாரிகள் கோரிக்கை

உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சி மற்றும் ஒரு நகர்ப்புற பகுதிக்கான சார்பதிவாளர் அலுவலகம் உடன்குடியில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நிரந்தர பதிவாளர் நியமிக்கப்படவில்லை. அலுவலக உதவியாளர், உதவி எழுத்தர், காவலர் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் உடன்குடியில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை உடன்குடி வியாபாரிகள் தண்டுபத்தில் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து சம்பந்தபட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உடன்குடிக்கு நிரந்தர பத்திர பதிவாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Next Story