பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி
நாமக்கல்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24-ந் தேதி தேசிய காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான எஸ்.பி.எம். உயர்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கபடி போட்டி, குண்டு எறிதல் போட்டி நடந்தது. மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் டேவிட் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தேசிய காசநோய் தினத்தன்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என காசநோய் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் நலக்கல்வியார் ராமச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story