கபடி போட்டி


கபடி போட்டி
x

வள்ளியூர் அருகே ஆ.திருமலாபுரத்தில் கபடி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே ஆ.திருமலாபுரத்தில் வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, ஏ.டி.ஆர். ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 4-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது. வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஆ.திருமலாபுரம் அணி முதலிடமும், நாங்குநேரி அணி 2-வது இடமும், கூடங்குளம் அணி 3-வது இடமும், முத்துநாடார்குடியிருப்பு அணி 4-வது இடமும் பிடித்தது. முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரத்து 1-ஐ வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் தேவேந்திரன் வழங்கினார். இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 1-ஐ மாசானமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 1-ஐ வள்ளியூர் பாலையா போர்வெல் உரிமையாளரும், நான்காம் பரிசாக ரூ.3 ஆயிரத்து 1-ஐ கிங்ஸ் பில்டர் உரிமையாளரும் வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.


Next Story