கரூரில் கபடி போட்டி


கரூரில் கபடி போட்டி
x

கரூரில் கபடி போட்டி நடந்தது.

கரூர்

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட பா.ஜ.க., விளையாட்டு, திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக கபடி போட்டி கரூர் பிரேம் மஹாலில் கடந்த 17, 18-ந்தேதிகளில் நடைபெற்றன. இதில் கரூர், குளித்தலை, தோகைமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 84 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டி பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில், முதல் பரிசான ரூ.1 லட்சம் மற்றும் கோப்பையை புலக்காரன்பட்டி பாரதி இளைஞர் நற்பணி மன்ற அணியும், 2-வது பரிசான ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையை தங்காலிபட்டி பாரதியார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 3-வது பரிசான ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையை வடசேரி லயன்ஸ் கிளப் அணியும், 4-வது பரிசான ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையை இனுங்கனூா் அம்மன் கபடி அணியும் பெற்றன. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை கரூர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன் வழங்கினார். கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் சரத்குமார் முன்னிலை வகித்தார். இதில், கரூர் மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், கோபிநாத், நவீன் குமார், செயலாளர்கள் சக்திவேல் முருகன், செல்வராஜ், துணைத்தலைவர்கள் ஈஸ்வரி, செல்வன், பொருளாளர் குணசேகரன், கரூர் தெற்கு நகரத் தலைவர் ரவி, கரூர் வடக்கு நகர தலைவர் வடிவேல் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story