கே.புதுப்பட்டியில் கபடி போட்டி


கே.புதுப்பட்டியில் கபடி போட்டி
x

கே.புதுப்பட்டியில் மது எடுப்பு திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற நொண்டி அய்யா கோவில் உள்ளது. இந்த கோவிலின் மது எடுப்பு திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதில், 60 கிலோ எடை பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் மாவடி பட்டி கருப்பர் கணபதி பிரதர்ஸ் அணியினர் முதல் பரிசையும், கரூர் வைகை பிரதர்ஸ் அணியினர் 2-வது பரிசையும், மாவடி பட்டி கத்தால முனீஸ்வரர் கணபதி பிரதர்ஸ் அணியினர் 3-வது பரிசும், கே.புதுப்பட்டி தாடி பிரபாகரன் நினைவு கபடி குழுவினர் 4-வது பரிசையும் தட்டி சென்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகையும், கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர். போட்டி நடுவே உள்ளூர் சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

1 More update

Next Story