தர்மபுரியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட கபடி போட்டி-43 அணிகள் பங்கேற்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி மோடி கபடி லீக் என்ற மாவட்ட அளவிலான கபடி போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 43 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட பொது செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஐஸ்வர்யம் முருகன், மாவட்ட துணைத் தலைவர் சோபன், நகர தலைவர் ஜிம் சக்திவேல், மாவட்ட பிற்பட்டோர் பிரிவு தலைவர் காவேரிவர்மன், விளையாட்டு துறை தலைவர் தினேஷ், வர்த்தக அணி தலைவர் ராஜசேகர், தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ஹரீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் வர்மா, முன்னாள் நகர தலைவர் நாகராஜ், நிர்வாகி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்ற அணிக்கு ரூ.30,000, 2-ம் இடத்தை பெற்ற அணிக்கு ரூ.20,000, 3 மற்றும் 4-ம் இடத்தை பெற்ற அணிகளுக்கு தலா ரூ.15,000 ரொக்க பரிசுகளை மாவட்ட தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார். இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தர்மபுரி மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகிற 28-ந் தேதி முதல் 3 நாட்கள் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.