உப்புக்கோட்டை அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி

உப்புக்கோட்டை அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுது.
உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் பாலார்பட்டி மோகன் நினைவு அணியும், வின்சன் கபடி குழு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோகன் நினைவு அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. வின்சன் கபடி குழு அணி 2-ம் இடத்தை பிடித்தது. இதேபோல் 3-ம் இடத்தை டி.எஸ்.பி. கபடி குழு அணியும், 4-ம் இடத்தை இளமருது அணியும் பிடித்தது.
இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் இலங்கேஸ்வரன், உப்புக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாலார்பட்டி நேதாஜி அணியை சேர்ந்த அருண்குமார், நீதிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.






